குறு நாடக விழா 2017

இளம் நெறியாளர்கள் 2017.
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக நாடகத்துறை பொருமையுடன் வழங்கிய குறு நாடக விழா 2017.
23 இளம் நெறியாளர்கள் 23 தமது சுய எழுத்துருவுடன் களம் கண்டனர், அனைவரும் தமது விஸவரூப வெற்றியை பறை சாற்றினர். ஒவ்வொரு கதைகளும் மானிட வாழ்வில் பேசா விடயங்களாக எம் சமூகத்தின் முதன்மை பிரச்சனைகளை மேடை ஏற்றினர். அவர்களது கடின முயற்சி ஆற்றுகையில் பிரதிபலித்தது பலரும் பேச மறுத்த,மறந்த, பயந்த விடயங்களை தமது ஆற்றுகையுடாக பேசினார்கள். இவர்களுக்கு பக்கபலாமாய் நாடகதுறை விரிவுரையாளர்கள் அயராது உழைத்தமை பராட்டுதற்கு உரியது பணிப்பாளரின் பலம் இவ் நிகழ்வை பெருவிழாவாக்கியது கிழக்கு பல்லகைக்கழக நுண்கலைத்துறை தலைவர் மற்றும் மாணவர்களது பங்களிப்பும் மிகுந்த பலமாய் அமைந்தது .இவர்களது கதைக்கலந்துரையாடலை நிகழ்த்திய உமாவரதராஜன் அவர்களுடைய பங்களிப்பும் இன்றியமையாத்தாகும். இதனை போல ஏனைய துறை மாணவர்களது ஒத்துளைப்பு மிகவும் அளப்பெரியது அவர்களது பங்களிப்பு இவ்வெற்றிகளை சாதனையாக்க பக்கபலமாய் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
23 இளம் கலைஞர்களுக்கும் பங்குபற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நாடகத்துறைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Connect with us

Swami Vipulananda Institute of Aesthetic Studies(SVIAS), Kallady, Batticaloa, Sri Lanka

  • dummy+94 65 222 5689

  • dummy+94 65 222 5689

  • dummy sviaseusl@yahoo.com

Newsletter

Enter your email and we'll send you more information

Search