சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021
நுண்கலைமாணி (கட்புல தொழில்நுட்ப கலைத்துறை) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை
- கட்புல தொழில்துட்பத்துறை மாணவர்களுக்கான செயல்முறை ஒளிப்பட மாதிரியை எமது இணையத் தளத்தில் பார்வையிட்டுக் கொள்ளுதல் வேண்டும். VTA: Click Here
- இச் செயல் முறைப் பரீட்சையானது 15 நிமிட அளவு நேரத்தைக் கொண்டதாக இருக்கும்.
- உங்களுக்குத் தரப்பட்ட காலஅட்டவணையின் பிரகாரம் அரைமணித்தியாலத்துக்கு முன்பாக தரப்பட்ட மெய்நிகர் செலிக்குள் (Zoom) நுழைதல் வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் ஒழுக்கமான ஆடை அணிந்திருத்தல் வேண்டும்.
- பரீட்சை நடைபெறும் போது மேற்பார்வையாளர் உங்களை அவதானித்துக் கொண்டிருப்பார். அதனால் உங்கள் ஒளிப்படத்தை நிறுத்தாமல் பரீட்சை முடியும் வரை இயக்கத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- பரீட்சைக்குச் தோன்றும் போது மாணவர்கள் வைத்திருக்க வேண்டியவை.
i. White paper A3 size
ii. Pencil 2B, 4B iii. Eraser
iv. Drawing Board 1.5 feet X 1.5 feet
v. Drawing Board Clip – 4 - பின்வரும் விடயங்கள் தங்கள் செயல்முறையில் கவனத்தில் கொள்ளப்படும்.
1. சுதந்திர வரைதல் திறன் ((Free hand drawing)
2. அளவுப் பிரமாணம் (Proportion)
3. ஒளிநிழல் படுத்துகை (Light and Shading)
4. உருவத்தொகுப்பு (Composition)
மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்
- குறைந்தபட்சம் மாணவர்கள் SMART கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும் கையேட்டுக்கணனி (Tablet), கையடக்க இசைக்கேளி (IPad) இருப்பின் அவற்றில் யாதேனும் ஒன்றினைப் பயன்படுத்தலாம்.
- சகல மாணவர்களும் தத்தமது பாடங்களுக்குரிய செயன் முறைவிளக்கக் காணொளியை நிறுவக இணையத்தளத்தில் பார்வையிட வேண்டும்.
- Audio, Video இணையம் என்பன தடங்கல் இல்லாமல் செயற்படும் இடத்தினைத் தெரிவுசெய்து, அவ்விடம் பரீட்சைக்குப் பொருத்தமானதா என்பதனை முற்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் தோன்றி, பரீட்சகரிடம் தங்கள் முகத்தினைத் தெளிவாகத் தெரியும் வண்ணம் காண்பிப்பதன் மூலம் தங்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
- கிடைத்தள நிலையில் (Land scape) பொருத்தமான பின்னணிச் சூழலில் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற மெய்நிகர் (Zoom) இணைப்பினூடாக இணைந்து கொள்ளுதல் வேண்டும்.
- தங்களது செயன்முறையினைப் படமெடுப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொள்வது விரும்பத்தக்கது.
- மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆற்றுகைகள், செயன்முறைகளை இடைவிடாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும்.
- போதிய வெளிச்சமுள்ள நிலையில் பரீட்சகர்களுக்கு நன்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் ஆற்றுகை செய்யப்பட வேண்டும்.
- மாணவர்கள் பரீட்சை விதிமுறைகளை மீறுவதாக இனம்காணப்பட்டால் அவர்களுடைய பதிவு முழுமையாக இரத்துச் செய்யப்படும்.
- தொழிநுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக sar_exam_svias@esn.ac.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 065-2222663 / 0777883229 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Deputy Registrar
Examination & Student Admission
Swamy Vipulananda Institute of Aesthetic Studies
Eastern University, Sri Lanka