திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நிகழ்வு

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக திரைப்பட சமூகத்தின் ஒழுங்கமைப்பில் 06.09.2022 அன்று மாலை 2.00 மணி அளவில் திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சொர்க்கத்தின் குழந்தைகள் எனும் ஈரானிய திரைப்படம் திரையிடப்பட்டது. இந் நிகழ்வானது, நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மையாரின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.கி.திருச்செந்தூரன் அவர்கள் திரைப்படத்தினை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து திரையிடும், கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலின் போது நிறுவக மானவர்கள், விரிவுரையாளர்கள், குறும்பட இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வின் கலந்துரையாடல் திரைப்பட சமூகத்தின் ஒழுங்கமைப்பாளர் திரு.தி.தர்மலிங்கம் வழிப்படுத்தப்பட்டது. நிகழ்வுக்கான ஒலி வடிவமைப்பினை திரு.கு.யூட்நிரோசன் அவர்கள் வழங்கியிருந்தார்.