புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2022 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதியன்று நிறுவக உடற்கல்வி அலகினால் உடற்பயிற்சி கூடம்(Gym) நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மையார் தலைமையில் பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களால் சிறப்புற திறந்து வைக்கப்பெற்றது. இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சம்மேளத்தின் தலைவர் கலாநிதி N.ராஜேஷ்வரன் அவர்கள், கிழக்கு மாகாணத்திற்கான UNICEF கள அலுவலகத்தின் தலைவர் ரிவேன்ஸியா பெற்றஸன் அவர்கள் மற்றும் CERI Sri Lanka நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் P. ரினோஷ் அவர்கள் வருகை தந்திருந்தனர். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி அலகின் பணிப்பாளர் திருமதி ரோகினி அன்டனி புவனசிங்கம் அவர்களும் வருகை தந்திருந்தார். இந்நிகழ்வில் நிறுவக மாணவர்களின் உடல் மற்றும் மன வள ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி கலாநிதி N.ராஜேஷ்வரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். உபவேந்தர் அவர்கள் எமது நிறுவக உடற்கல்வி அலகினால் பாரம்பரிய விளையாட்டுக்கள் இலங்கையிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனும் சிறப்பான ஆலோசனையை வழங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிகழ்வில் துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர். இந்நிகழ்வானது நிறுவக உடற்கல்வி அலகின் போதனாசிரியர் திருமதி மிருணாளினி அரவிந்தன் அவர்களால் ஒருங்கமைப்பு செய்யப்பட்டது. இன்நிகழ்வினை திருமதி வி.கிருஸ்னவேணி அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.