சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 2020/2021ம் கல்வியாண்டுக்கான நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும்/கட்புல தொழில்நுட்பக் கலைகள்) பட்டப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி எதிர்வரும் 22.04.2022 தொடக்கம் 06.05.2022ம் திகதி வரை இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொண்ட பின்னர் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பெற்றுக்கொண்ட பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அச்சுப் பிரதி செய்து அதில் ஒப்பமிட்டு பாடசாலைப் பரீட்சார்த்தியெனில் பாடசாலை அதிபரினாலும் தனிப்பட்ட பரீட்சார்த்தியெனில் சமாதான நீதவானினாலும் உறுதிப்படுத்தப்பட்டு தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இணையத்தளத்தினூடாகப் பதிவினை மேற்கொள்ளாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவினை மேற்கொள்வதற்கு விருப்பமில்லாதவர்களெனக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும். 

இணையத்தளத்தினூடாக பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் திகதி உரிய மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் நிறுவகத்தின் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலவே அச்சுப் பிரதி செய்து வைத்திருக்கும் விண்ணப்பப்படிவத்துடன் கீழே குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கிணங்க நிறுவகத்தினால் அறிவிக்கப்படும் திகதியன்று நிறுவகத்தின் பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளை மற்றும் மாணவர் நலன்புரி பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையேற்படின் இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள பிரதிப்பதிவாளரை 065-2222663 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

மேலதிக தொழில்நுட்ப உதவிக்காக Mr.K. Thiruchenthuran இணைப்பாளர்/ தகவல் தொடர்பாடல் பிரிவு அவர்களை 0752728899 என்ற இலக்கத்தினூடாகவும் அல்லது S. Ketheeswaran – 0777883229 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ள முடியும்.

 

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. பின்வரும் ஆவணங்கள் நிறுவகத்தினால் குறிப்பிடப்படும் திகதியன்று ஏலவே அச்சுப்பிரதி செய்த விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
i. விண்ணப்பதாரியின் 4X5 செ.மீ அளவுள்ள ஆறு வர்ண புகைப்படப் பிரதிகள்
 
ii. சமாதான நீதவான்/ சத்தியப்பிரமாண ஆணையாளர் அல்லது பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்திய பிறப்புச்சான்றிதழில் மூலப்படிவம் மற்றும் புகைப்படப் பிரதி
 
iii. பெயரில் வித்தியாசம் இருப்பின் ஒரு சத்திய கடதாசி/ சமநேர சான்றிதழ்/ திருமண சான்றிதழ்/ திருத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றின் மூலப்படிவம் மற்றும் புகைப்படப் பிரதி
 
iv. பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட க.பொ.த (சா/ த) சான்றிதழின் மூலப்படிவம்/ பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட பெறுபேறு அட்டையின் மூலப்படிவம் மற்றும் சமாதான நீதவான்/ சத்தியப் பிரமாண ஆணையாளர் அல்லது பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
 
v. பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட க.பொ.த (உ/ த) சான்றிதழின் மூலப்படிவம்/ பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட பெறுபேறு அட்டையின் மூலப்படிவம் மற்றும் சமாதான நீதவான்/ சத்தியப் பிரமாண ஆணையாளர் அல்லது பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்.
 
vi. மாணவர் பதிவு அட்டையின் (பாடசாலை விலகற் சான்றிதழ்) மூலப்படிவம் மற்றும் பிரதி
 
vii. பதிவிற்கான கட்டணங்கள்
பதிவுக்கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை (ரூபா. 3000/-) பற்றுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு மக்கள் வங்கி கிளையொன்றில் செலுத்தி,வங்கியினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுப் பிரதியினை சமர்ப்பிக்க வேண்டும்.  பற்றுச்சீட்டு (PAYING-IN-VOUCHER) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Click here for Paying in Voucher Form 
 
viii. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதேனும் வழங்கியிருப்பின், அந்த ஆவணங்களின் தொடர் எண்ணிணை கீழே தரப்பட்டுள்ள கூட்டினுள் (√) அடையாளமிடுக.
 
இத்துடன் இணைக்கப்பட்ட இப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு அச்சுப் பிரதி செய்த விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இத்துடன் இணைக்கப்பட்ட இப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு அச்சுப் பிரதி செய்த விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Click here for the form

இத்துடன் இணைக்கப்பட்ட இப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு அச்சுப் பிரதி செய்த விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Click here for the form

விடுதி வசதியினைப் பெறுவதற்கு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திலிருந்து 40 கிலோமீற்றருக்கு அப்பால் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மாணவர்கள் மாத்திரம் இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாணவர் நலன்புரி பிரிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Click here for the form

உதவிப் பதிவாளர், மாணவர் நலன்புரி பிரிவு, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழம், இலங்கை, கல்லடி, மட்டக்களப்பு என விலாசமிடப்பட்ட ரூபா. 50/- முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையுடன், இத்துடன் இணைக்கப்பட்ட உடல்நல வரலாற்றுப் பத்திரத்தை பதிவிறக்கம் செய்து பூரணப்படுத்தி வைத்தியசாலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். உரிய பரிசோதனைகளின் நிறைவில் வைத்தியசாலையினால் எமக்கு அனுப்பி வைக்கப்படும்.

Click here for the form

உதவிப் பதிவாளர், மாணவர் நலன்புரி பிரிவு, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழம், இலங்கை, கல்லடி, மட்டக்களப்பு என விலாசமிடப்பட்ட ரூபா. 50/- முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையுடன், கிராம சேவையாளர் ஊடாகப் பிரதேச செயலாளருக்கு இத்துடன் இணைக்கப்பட்ட மாணவர் நிதி உதவிக்கான விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூரணப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரிய உறுதிப்படுத்தலின் பின்னர் பிரதேச செயலாளரினால் எமக்கு அனுப்பி வைக்கப்படும்.

Click here for the form

சிரேஷ்ட உதவிப் பதிவாளர்

பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிகள் கிளை

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்,

கல்லடி, மட்டக்களப்பு.