பதிவுகளை மேற்கொண்டிருந்தும் ஆவணங்களைக் கையளிக்கத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல் – 2018/2019


சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2018/2019 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டு நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தும் ஆவணங்களைக் கையளிக்கத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல்.

மேற்குறிப்பிட்டபடி தங்களது ஆவணங்களைக் கையளிக்கத் தவறிய மாணவர்கள் எதிர்வரும் 24.02.2021 புதன்கிழமை அல்லது 25.02.2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும் இடைப்பட்ட வேலை நேரத்தில் மாணவர் அனுமதிகள் கிளையில் உள்ள பிரதிப் பதிவாளரிடம் தங்களது ஆவணங்களை ஒப்படைத்து தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.


மாணவர்கள் வருகைதரும்போது தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு முகக்கவசம் உட்பட இன்னும் உரிய ஏற்பாடுகளுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..


பிரதிப்பதிவாளர்
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்