மணற்சிற்பகண்காட்சி -2019


மணற்சிற்பகண்காட்சி

கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் ‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019’ தினத்தை முன்னிட்டு 14/02/2019 அன்று கலாநிதி ஜெய்சங்கர் தலமையில் பலநிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த தினத்தின் கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வான காலை பொழுதில்
‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019 ‘ நிகழ்வு மற்றும் அதன் உருவாக்க பின்னணி பற்றிய உரை அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றும் திரையிடபட்டது.பின்னர் மட்டகளப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு சார்பில் திருமதி சேதீஸ்வரி யோகேஸ்வரன் மற்றும் செல்வி. அனுராதா அவர்களின் பேச்சு நிகழ்வும் இடம்பெற்றதுடன்

இரண்டாம் கட்ட நிகழ்வாக கல்லடி கடற்கரைவெளியில் விரிவுரையாளர் திருமதி ரினுஜா சிவசங்கர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கட்புலக்கலை மாணவர்களினால் பெண்களின் சமஉரிமை பங்களிப்பு அன்பு பற்றியதான எண்ணக்கருவுடன் பல மணற்சிற்பங்கள் வடிவமைக்கபட்டு காட்சிபடுத்தப்பட்டது.

கட்புலதுறை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் இந்த மணற் சிற்பங்கள் உருவாக்கினர். 
இந்த மணற்சிற்பகண்காட்சியினை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் பார்த்தும் ரசித்தும் சென்றிருந்தனர்.

no images were found