Volume 01 Issue 01
V.Vimalathithan
Department of Tamil, University of Peradeniya, Sri Lanka.
Correspondence: v.vimalathithan@gmail.com
Submitted: July 14, 2022; Revised: December 28, 2022; Accepted: January 8, 2023
ABSTRACT: This study examines the origin of the Dancing girls (Devaradiyar) tradition which promoted artistic service, especially focusing on the art of dance, existed in Trincomalee (Thirukoneswaram), one of the oldest temples in Sri Lanka. The Devaradiyar tradition which existed in Tamil Nadu attained eminence during the Chola rule. Kulakottan or Cholagangan who ruled the Trincomalee region in Sri Lanka, as the representatives of the Cholas, brought various communities from Tamil Nadu. They were settled in the Trincomalee to serve in the Thirukoneswaram temple. Devaradiyar lineage is one of the communities that migrated from Tamil Nadu to Sri Lanka for rendering service to Thirukoneswaram. However, adequate studies have not been conducted regarding the Devaradiyar who were settled in Trincomalee. The main objective of this study is to describe the data related to Devaradiyar, extracted from the Konesar Kalvettu, literature that reveals information about the systems and orders of the Thirukoneswara temple. This study raises questions pertaining to the kinds of services rendered by Devaradiyar settlers to the temple, the regulations related to them during that period and attempts to find explanation for these issues. The primary data consist of verses and prose taken from Konesar Kalvettu. The secondary data include collections of research documentation linked to the political, social, and religious history of Trincomalee and information related to the Devaradiyar community.
KEY WORDS: Devaradiyar, Hindu tradition, Manickam, Stone inscription, Temple tradition, Trincomalee.
Journal Title: Sri Lanka Journal of Aesthetic Studies (SJAS)
Frequency of Publication: Bi Annual (June and December)
Volume : No. 01 Issue: No. 01
Page : 1- 12
ISSN (Online) : 2989-0225
Name of the Publisher: Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka
இலங்கையின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான திருக்கோணேச்சரத்தில் நிலவியதும் ஆடற்கலையை முன்னிறுத்திய கலைச்சேவையை முன்னெடுத்ததுமான தேவரடியார் மரபானது, அவ்வாலயத்தில் தோற்றம்பெற்ற விதம் குறித்து இக்கற்கை ஆராய்கின்றது. தமிழகத்தில் நிலவிவந்த தேவரடியார் முறைமை சோழர் ஆட்சிக்காலத்திலேயே தனது உன்னத நிலையை எய்தியிருந்தது. இலங்கையின் திருகோணமலைப் பிராந்தியத்தை சோழர்களின் பிரதிநிதியாக ஆட்சிசெய்த குளக்கோட்டன் அல்லது சோழகங்கனால், திருக்கோணேச்சர ஆலயத்தில் பணி செய்வதற்காக பல்வேறு சமூகத்தினர் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்டு, ஈழத்தின் கிழக்கே திருகோணமலையில் குடியேற்றப்பட்டனர். திருக்கோணேச்சரத்தின் சேவைக்காக தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த சமூகங்களுள் தேவரடியார் குடியும் ஒன்றாகும். திருக்கோணேச்சர ஆலயத்தின் முறைமைகள் – ஒழுங்குமுறைகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் இலக்கியமான கோணேசர் கல்வெட்டிலிருந்து பகுத்து எடுக்கப்பட்டதும் தேவரடியார் தொடர்பானதுமான தரவுகளை விபரிப்பதுடன், அவற்றை விளக்குவதும் இக்கற்கையின் நோக்கமாகின்றது. குடியேற்றப்பட்ட தேவரடியார்கள் அக் கோயிலுக்கு எவ்வகையான பணிகளை ஆற்றினார்கள், அவர்கள் தொடர்பிலான ஒழுங்குமுறைகள் அக்காலத்தில் எவ்வாறு அமைந்திருந்தன முதலான கேள்விகளை இக்கற்கை எழுப்புவதுடன் அவற்றுக்கு விளக்கம் காணவும் முயற்சிக்கின்றது. பிரதான தரவுமூலமாக கோணேசர் கல்வெட்டை மட்டும் பயன்படுத்துவது இதன் ஆய்வெல்லையாக அமைகின்றது. பகுப்பாய்வு, விபரணம், விளக்கம் ஆகிய ஆய்வுமுறைகள் இக்கற்கையின் இலக்கை அடைவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
S. Chandrakumar
Department of Fine Arts, Eastern University, Sri Lanka.
Correspondence: chandrakumars@esn.ac.lk
Submitted: August 25, 2022; Revised: December 13, 2022; Accepted: December 28, 2023
ABSTRACT: The ancient Tamil musical forms have been followed in the socio-cultural life elements since the bygone days. The poets and artists of the particular villages take up the “Pa” varieties found in the Sangam literature in the performing arts and rituals learned in the cultural sphere of Tamil society. The influence of Tamil musical forms highly prevails in the cultural space of Eelamist Tamils where koothatharangu is performed in conjunction with their lives. The poets who have written kooththu make use of Tamilisai forms such as paakkal, paavinagkal, and paavakaikal which were used in order to express the aesthetic aspects of the settings in the old Tamil literature. As Alaṅkārarūpaṉ fails to investigate the use of Tamilisai tradition in Teṉmōṭik Kooththu Paṉuval, this research attempts to find out the manner in which Tamil Isai forms have been used in a tenmodi kooththu copy. The methodology of this study incorporates descriptive research methods and qualitative techniques. The rereading of Alaṅkārarūpaṉ kooththu panuval, playing the role of Alaṅkārarūpaṉ during the performance, familiarity of understanding the tharukkal, viruththams, and other “Pa” patterns exhaustively, and reapplication of those in relation to the text are the foremost concerns of this research. In addition, historical and comparative methods have been used. The primary data for this study were obtained from the Alaṅkārarūpaṉ Teṉmōṭik Kooththu Paṉuval and the field experience acquired through participating in this kooththu performance. The secondary data collection consists of data derived from books, literature, studies, essays, and websites.
KEY WORDS: Alaṅkārarūpaṉ, Eealmist Kootharaungu, Teṉmōṭik Kooththu, Traditional Theater.
Journal Title: Sri Lanka Journal of Aesthetic Studies (SJAS)
Frequency of Publication: Bi Annual (June and December)
Volume : No. 01 Issue: No. 01
Page : 1- 6
ISSN (Online) : 2989-0225
Name of the Publisher: Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka
ஈழத்தமிழர் பாரம்பரியக் கூத்தரங்கில் தமிழிசை மரபின் பிரயோகம் பற்றிய விரிவான கருத்தாடலைக் கொண்டதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘அலங்காரரூபன்’ எனும் தென்மோடிக் கூத்துப் பனுவலினை மையப்படுத்தி, ஈழத்துக் கூத்தரங்கில் தமிழிசை மரபின் பிரயோகத்தினை ஆராய்கிறது. கூத்தை எழுதும் புலவர்கள் பழந்தமிழ் இலங்கியங்களில் வேறுவேறான சூழமைவுகளின் அழகியல் அம்சத்தை வெளிப்படுத்தும் நோக்கில் பாவிக்கப்பட்ட பாக்கள், பாவினங்கள், பாவகைகள் ஆகிய தமிழிசை வடிவங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. கூத்தர்கள் இந்தப் பா இலக்கணங்களை வேறுவேறான இராக (ஓசை – மெட்டு) முறையுடன் மனனம் செய்து கொள்ளவும் இலகுபடுத்தவும் விடிய விடிய ஆடப்படும் கூத்தில் பாடல் மூலமாக எழுப்பப்படும் இசையின் லயம் மக்களின் உடலில் உட்புகுந்து உணர்வுகளில் மேலெழுந்து கொள்ளவும் வழிவகுக்கின்றது. இது கர்நாடக சங்கீதமோ, நாட்டார் இசையோ இல்லை. தென்மோடிக் கூத்தாக ஆடப்படும் ‘அலங்காரரூபன்’ நாடக எழுத்துப் பனுவலை அடிப்படையாகக் கொண்டு, தமிழிசை மரபு எவ்வாறான முறைமையில் பயன்படுத்தப்பட்டன என்பது ஆராயப்படுகிறது. தென்மோடிக் கூத்துப் பிரதி ஒன்றில் தமிழிசை வடிவங்கள் பிரயோகிக்கப்பட்ட முறையினைக் கண்டறிதலை பிரதான நோக்காகக் கொண்டதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. அலங்காரரூபன் தென்மோடிக் கூத்துப் பனுவலில் தமிழ் இசை மரபின் பிரயோகம் பற்றி காத்திரமான ஆய்வுகள் இல்லாமை ஆய்வின் பிரச்சினையாக ஆய்வாளரால் பார்க்கப்பட்டது. இவ்வாய்வில் விபரண ஆய்வு முறையியலுடன் பண்புசார் ஆய்வு நுட்பம் கையாளப்படுகின்றது. அலங்காரரூபன் கூத்துப் பனுவலை மீண்டும் மீண்டும் வாசித்ததோடு, இக்கூத்து ஆற்றுகை செய்யப்பட்ட பொழுது அதில் அலங்காரரூபன் எனும் பாத்திரம் ஏற்று ஆடி, அதில் வரும் தருக்கள், விருத்தங்கள், ஏனைய பா வடிவங்கள் முதலியவற்றை நன்கு உணர்ந்து கொண்ட பரிச்சயமும் அதனை மீண்டும் பனுவலுடன் பிரயோகித்துப் பார்த்தமையும் ஆய்வில் பிரதானமாகின்றது. அத்துடன், வரலாற்று முறையியல், ஒப்பீட்டு முறையியல் முதலியனவும் கையாளப்படுகின்றன. தரவுசேகரிப்பு: இவ்வாய்வில் ‘அலங்காரரூபன்’ நாடகம் தென்மோடிக் கூத்துப் பனுவலும், இக் கூத்தாற்றுகையில் பங்குகொண்டு ஆடிய கள அனுபவமும் பிரதான ஆய்வு மூலங்களாக உள்ளது. இது தொடர்பாக வெளியான நூல்கள், இலக்கியங்கள், ஆய்வுகள், கட்டுரைகள், இணையத்தளங்கள் இரண்டாம் நிலைத் தரவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
Prashanthi Elango
Department of Fine Arts, Eastern University, Sri Lanka.
Correspondence: ilangop@esn.ac.lk
Submitted: 30.05.2022 Revised: 17.11.2022 Accepted: 15.12.2022
ABSTRACT: Several literatures constantly emerged in past decades.Nevertheless, not all the literatures survive up to the presentmoment. Incomparably, Silappathikaram is regarded as thesurviving literature. It is the foremost of the five great epics inTamil. The epic was written by the poet Ilango Adigal in 2ndcentury B.C. It is considered as the treasure trove for delineatingthe elements of Iyal (poetry), Isai (music), Natakam (drama).Undoubtedly, the intricacies and the techniques of music inSilappathikaram was the great inspiration for the composers oflater years. Silappathikaram songs have been widely used in thefield of music. Yet, it has not been documented as a whole. Theforemost concern of this research is to comprehend the use ofSilappathikaram songs as a whole. Therefore, the main objectiveof this research is to trace the influence and the use ofSilappathikaram songs in the field of music. The study utilizedexploratory method and the primary data is gathered throughthe songs which are emerged in the later years. The researchreveals that, Silappathikaram songs have been used as film songs,ragamalika (the composition of different ragas) in musicalconcerts, and dance-drama songs. It has been found that, Navarasa(Nine emotions) songs of Silappathikaram have been researchedwidely and identified that the punn (the melodic mode used by theTamil people in their music since ancient times) used incontemporary songs equivalently found in Silappathikaram songs.
KEY WORDS: Punn, Swara (the sound of musical note), Ragamalika, Mettu (a musical interval)
Journal Title: Sri Lanka Journal of Aesthetic Studies (SJAS)
Frequency of Publication: Bi Annual (June and December)
Volume : No. 01 Issue: No. 01
Page : 01-04
ISSN (Online) : 2989-0225
Name of the Publisher: Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka
காலம் தோறும் எத்தனையோ இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் அவை எல்லாமே காலத்தால் வாழ்ந்துவிடவில்லை. முத்தமிழ்
காப்பியங்களில் ஒன்றாகவும், ஐம்பெரும் காப்பியங்களுள் முதன்மையானதாகவும் விளங்கும் சிலப்பதிகாரமானது இன்றுவரை
காலத்தால் வாழும் இலக்கியமாக விளங்க, இயலிசை நாடகம் தொடர்பாக இளங்கோவடிகள் வழங்கியுள்ள பெறுமதிமிக்க
செய்திகளே முக்கிய காரணிகளாக அமைகின்றன. கி.பி 2ம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்றதாக கூறப்பட்டாலும் கி.பி 21ம்
நூற்றாண்டில் கூட சீரும் சிறப்பும் குன்றா இலக்கியமாகக்
கருதப்படும் சிலப்பதிகாரத்தில் எடுத்தாளப்பட்டுள்ள இசைப்பாக்கள் முக்காலமும் வாழும் பெருமைக்குரியவை. கவிநயமும்
கருத்தாழமும் மிக்க பாடல்களுக்கு, இளங்கோவடிகளின் கற்பனையும் எதுகை மோனைகளும் இன்னும் வளம் சேர்க்கின்றன.
இவை எல்லாமே பின்வந்த இசையாசிரியர்களால் கவரப்பட்டு, இலகுவாக ஸ்வரங்கள் சேர்த்து மெட்டமைத்து பாடப்படக்
காரணமாயிருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரப் பாடல்கள் பிற்கால இசைத்துறையில் எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன என்பதை அறியும் ஆய்வாகவே இவ்வாய்வு அமைகின்றது.
இசைத்துறையில் பல தேவைகளுக்காக சிலப்பதிகாரப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவை அனைத்தையும் ஒரே பார்வையில் தொகுக்கும் நோக்கில் இவ்வாய்வு முக்கியம் பெறுகின்றது. சிலப்பதிகாரப் பாடல்கள் திரையிசைப்
பாடல்களாகவும், இசையரங்குகளில் இராகமாலிகாவாகவும், நாட்டியநாடகப் பாடல்களாகவும், பயன்படுத்தப்பட்டுள்ளன.
நவரசங்கள் நிறைந்த பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இராக தாளங்கள் சேர்க்கப்பட்டும், சமகாலப் பண்களுக்கு நிகரொத்த
பண்கள் சிலப்பதிகார காலத்திலே கையாளப்பட்டிருப்பது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டும், வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் இசை வரலாற்றில் சிலப்பதிகாரப் பாடல்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கினறன என்பதை ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய தொகுப்பு இதுவரை ஆய்வு வரலாற்றில் நிரப்பப்படாத இடைவெளியாகவே காணப்படுகின்றது. இவ்வாறு இசைத்துறையில் பல தேவைகளுக்காக சிலப்பதிகாரப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவை அனைத்தையும் ஒரே பார்வையில் தேடியறியும் பின்னணியில் இவ்வாய்வினுடைய முக்கியத்துவமும் நோக்கப்படுகின்றது.
S.Karpagam
Department of Music, Tamil University, India
Correspondence: karpagamsureshkumar@gmail.com
Submitted: October 13, 2022; Revised: December 19, 2022; Accepted: January 29, 2023
ABSTRACT: The objective of this study is to compile the references of conventional system of music and the musicians in Naalayira Divya Prabandham. It is a collection of four thousand Tamil verses. Pann (the melodic mode used by the Tamil people in their music since ancient times)) and Tala (a musical measure) are the epitome of this classic literature. It was sung by the saints in earlier days. In contemporary days , it has been recited as chanting. The data for this study were obtained from the classic literature Naalayira Divya Prabandham. The study reveals that, out of the four thousand prabandham verses the three thousand prabandham verses are not belong to Isai Paa (Musical poem). The remaining prabandham verses are belong to Isai Paa(Musical poem) tradition. Mudalayiram ( the first thousand prabandham verses) consists of Alvars Isai Paa (Musical poem). Irandam Ayiram (the second thousand prabandham verses) consists of Thirumangai Alvar’s Isai Paa (Musical poem). Mundram Ayiram (the third thousand verses) is an Iyarppa ( the prose works) included the compositions of many Alvars. Nangam Ayiram (the four thousand verses) included Nammalvar’s Isai Paa(Musical poem).
KEY WORDS:Pann, Ragas, Tala, chanting
Journal Title: Sri Lanka Journal of Aesthetic Studies (SJAS)
Frequency of Publication: Bi Annual (June and December)
Volume : No. 01 Issue: No. 01
Page : 01- 04
ISSN (Online) : 2989-0225
Name of the Publisher: Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka
தெய்வத்தமிழ் பேசும் இசைத்தமிழ்ப் பாக்கள் தொன்மை உடையது. தொடர்ச்சி உடையது இன்றும் வாழ்ந்து வருகிறது. இவை பாட்டு என்றும், பாசுரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் வைணவம் தந்த பாசுரத் தொகுப்புகளை நாலாயிரம் என்றும், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்றும் அழைப்பர். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய இப்பாசுரத் தொகுப்புகளை வேத வியாசர் வேதங்களை நான்காக வகுத்துத் தொகுத்தது போல் (தெய்வத்தமிழ், கருத்தரங்கக் கட்டுரைத்தொகுப்பு, ப.396) வைணவப் பாசுரங்களைத் தொகுத்த நாதமுனிகள் நான்கு தொகுதிகளாக வகுத்துத் தந்துள்ளார். இவ்வாறு வகுக்கும் பொழுது இசைப்பா, இயல்பா என்ற வகையில் வகுத்துத் தந்துள்ளார். இவற்றுள் இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும், இயல்பாடல்களை ஒரு தொகுதியாகவும் அமைத்துத் தந்துள்ளார். நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் முதலாயிரம், இரண்டாயிரம், நான்காமாயிரம் ஆகியன மூன்று தொகுப்புப் பாசுரங்கள் இசைப்பா பகுதிகளாகும். மூன்றாம் ஆயிரப் பாசுரங்கள் இயல்பா பகுதிகளாகவும் அமைந்துள்ளன.