நடன,நாடகத்துறையின் உலக நாடகதின விழா
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக தின விழா கடந்த 30.03.2021 அன்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு நடன, நாடகத்துறை தலைவர் கலாநிதி ஜெயரஞ்ஜினி ஞானதாஸ் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டார். சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் கவி ஆற்றுகை இடம்பெற்றது. தற்காலிக உதவி விரிவுரையாளர்களது நெறிப்படுத்தலில் அக்கினிக் குஞ்சு – இசையும் அசைவும் […]