கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு தமிழ் நாட்டு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். பஞ்சநதம் வருகை
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக உத்தியோகத்தர் மேம்பாட்டு நிலையத்தின் இணைப்பாளராகிய கலாநிதி ஜயந்தினி விக்னராஜன் அவர்களின் ஏற்பாட்டில் ‘சமகால சூழலில் பட்டதாரி மாணவர்களின் மனப்பாங்கினை புரிதல்’ என்னும் தலைப்பில் தமிழ் நாட்டு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். பஞ்சநதம் அவர்கள் வளவாளராக 03.10.2022 அன்று பணிப்பாளரின் அழைப்பின் பேரில் நிறுவகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரை நிறுவக கல்விசார் உத்தியோகத்தர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். வளவாளராக வருகை தந்த பேராசிரியர் என். பஞ்சநதம் அவர்கள் விபுலானந்தருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் நிறுவக வழிபாட்டு தலத்தில் உள்ள நவராத்திரி கொலுவினை பார்வையிட்டு பணிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்று பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இச்செயலமர்விற்கு எமது நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மணி அவர்கள் தலைமை வகித்தார். நிறுவகத்தின் அனைத்து சிரேஷ்ட விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும், போதனாசிரியர்களும், திருமலை வளாக பீடாதிபதி அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் மற்றும் பிற துறை சார்ந்தவர்களும் இச்செயலமர்வில் கலந்து சிறப்பித்தனர்;. இச்செயலமர்வானது சுவாரசியமாகவும், கலந்துரையாடலாகவும், அறிவு பூர்வமானதாகவும் அமைந்தது. இறுதியாக பேராசிரியர் அவர்களுக்கு பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மணி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார். இத்துடன் செயலமர்வு இனிதே நிறைவேறியது.