சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத் தொழிநுட்பக் கலைத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர்வர்ண செயலமர்வானது 2ஆம் வருட 1ஆம் அரையாண்டு மாணவர்களுக்கு 01.11.2023, 02.11.2023 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இச்செயலமர்விற்கு வளவாளராக சமகால ஓவியர் திரு. சுபத்ரகே நுவன் நாலக (ஆச. ளுரடியடிசயபந ரேறயn யேடயமய) அவர்கள் பங்கேற்றிருந்தார்கள். இந் நிகழ்வானது துறைத்தலைவர் திரு. ர. பிரகா~; அவர்களுடன் நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி. புளொரன்ஸ் பாரதி கென்னடி அம்மையாரின் தலைமையில்; ஆரம்பம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இச்செயலமர்வின் முதல் நாள், ஓவியரின் படைப்பாக்கங்கள் பற்றிய கதையாடலும் இரண்டாம் நாளில், நீர்வர்ண செயலமர்வின் வெளிக்களப் பயிற்சியாக கல்லடி கடற்கரையிலும் நடைபெற்றது. இதில் வெளிக்கள ஓவியம் வரைதல் மற்றும் நீர்வர்ண ஓவிய நுட்பமுறைகள் பற்றிய தெளிவுரை மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இச்செயலமர்வினை கட்புல தொழிநுட்பக் கலைத்துறை விரிவுரையாளர் திரு. ஆ.லெ அஸ்மர் ஆதம் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.