நடன,நாடகத்துறையின் உலக நாடகதின விழா


சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக தின விழா கடந்த 30.03.2021 அன்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு நடன, நாடகத்துறை தலைவர் கலாநிதி ஜெயரஞ்ஜினி ஞானதாஸ் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டார். சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் கவி ஆற்றுகை இடம்பெற்றது. தற்காலிக உதவி விரிவுரையாளர்களது நெறிப்படுத்தலில் அக்கினிக் குஞ்சு – இசையும் அசைவும் ஆற்றுகை செய்யப்பட்டது. சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி உமா சிறிசங்கரின் நெறியாள்கையில் கூத்தரங்க ஆற்றுகை இடம்பெற்றது. துறைத் தலைவர் கலாநிதி ஜெயரஞ்ஜினி ஞானதாஸ் நெறியாள்கையில் மனவெளி ஆற்றுகை இடம்பெற்றது. விரிவுரையாளர் தி. தர்மலிங்கம் நெறியாள்கையில் துணி அரங்க ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. விரிவுரையாளர் அ.விமலராஜ் நெறியாள்கையில் தெருவெளி அரங்கு நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

World Theatre Day, organized by the Department of Dance, Drama & Theatre Arts

World Theatre Day was celebrated on 30th of March 2021, headed by Dr. (Ms.). Gnanadas. Dr. Florence Bharathy Kennedy was the Chief Guest. The following events were held. Poetry reading – directed by Mr. K. Mohanathasan, Akkini Kunju – directed by Temporary Lecturers, Koothu – directed by Ms. U. Srishanker, Manavelli– – directed by Dr. (Ms.). Gnanadas, Thuni – Mr. T. Tharmalingam, Theruvelli arangu – directed by Mr. A. Vimalraj. All the students at SVIAS, staff members, school children, and many enthusiasts took part in the event.