Dance

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்

கிழக்குப் பல்கலைக்கழகம்இலங்கை

பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021

நுண்கலைமாணி (நடனம்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை

நடனசெயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டம் பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்கலினைக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டம் பரீட்சார்த்திகளது நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்கலினைக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது.

முதற்கட்டம்

இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கு இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Clickசெய்யவும்.

 இக்காணொளிப்பதிவில் அடங்கியிருக்க வேண்டிய விடயங்கள்

உருப்படி:- மிஸ்ர அலாரிப்பு

  1. பரீட்சார்த்திக்கு அனுப்பப்படுகின்ற ஒலிப்பதிவுக்கு (Audio) நடனமாடி அதனை ஒளிப்பதிவு (Video) செய்து அனுப்ப வேண்டும். 
  2. பரீட்சார்த்தி பொருத்தமான நடனப் பயிற்சி உடையுடன் (Costume Saree), எளிமையான ஒப்பனை (Normal Makeup) அலங்காரம் இட்டு பரீட்சகர்கள் நன்கு அவதானிக்கும் வகையில் ஒளிப்பதிவினைச் (Video) செய்ய வேண்டும்.
  3. ஒலிப்பதிவினைத் (Audio) தவிர எந்தவொரு பக்கவாத்தியமும் பயன்படுத்தலாகாது.
  4. போதிய வெளிச்சமுள்ள நிலையில் பரீட்சகர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வண்ணம் ஆற்றுகை செய்யப்பட வேண்டும்.
  5. ஓளிப்பதிவினை மேற்கொள்ளும்போது ஒலிப்பதிவினை (Audio)  செவிமடுப்பதற்கு ஒரு சாதனமும் ஒளிப்பதிவினை (Video) மேற்கொள்வதற்கு இன்னொரு சாதனமும் பயன்படுத்தப்படல் வேண்டும்.
  6. பதிவு செய்யப்படுகின்ற பாடல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடை நிறுத்தப்படாமலும் திருத்தப்படாமலும் (Do not edit) அமைதல் அவசியமாகும்.
  7. தாங்கள் காணொளிப் பதிவேற்றம் செய்வதற்கான நட்டுவாங்கம் செய்யப்பட்ட ஒலிப்பதிவு கீழ்வரும் Link இல் இணைக்கப்பட்டுள்ளது.

Click Here

இரண்டாம் கட்டம்

இப் பகுதியானது பரீட்சார்த்திகள் மெய்நிகர் (Zoom) வழியாக இணைந்து பரீட்சகரினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு செயன்முறை, வாய்மொழி மூலமாகப் பதிலளிப்பதாக அமையும்.

1. பரீட்சார்த்திகள் தயார் செய்ய வேண்டிய செயல்முறைக்கான உருப்படிகள்

  1.  அ) வர்ணம்

நீர் கற்றுக் கொண்ட பதவர்ணத்தில் திரிகால ஜதியினை (முதலாவது ஜதி) தாளத்துடன் பாடிக் கொலுப்பித்தல்.

 ஆ) பதம்

பரீட்சகரால் பாடப்படுகின்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிக் காண்பித்தல்.

 இ) அறிமுறை

பரீட்சகரால் வினாவப்படும் நடனம் தொடர்பான அறிமுறை சார்ந்த வாய்மொழி      வினாக்களுக்கு விடையளிக்கப்படல் வேண்டும்.

2.இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்

  1. பரீட்சகரால் வினாவப்படும் நடனம் தொடர்பான அறிமுறை சார்ந்த வாய்மொழி வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
  2. ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
  3. பரீட்சார்த்திக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாக மெய்நிகர் செயலிக்குள் உள் நுழைய வேண்டும்.
  4. பரீட்சார்த்தி பொருத்தமான நடனப் பயிற்சி உடையுடன் (Costume Saree), எளிமையான ஒப்பனை (Normal Makeup) அலங்காரம் இட்டு பரீட்சகர்கள் அவதானிக்கும் வகையில் பரீட்சைக்குத் தோற்றவேண்டும். 

மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்

  1. குறைந்தபட்சம் மாணவர்கள் SMART கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த     வேண்டும். இருப்பினும் கையேட்டுக்கணனி (Tablet), கையடக்க இசைக்கேளி (Ipad) இருப்பின் அவற்றில் யாதேனும் ஒன்றினைப் பயன்படுத்தலாம். 
  2. Audio, Video இணையம் என்பன தடங்கல் இல்லாமல் செயற்படும்    இடத்தினைத் தெரிவுசெய்து, அவ்விடம் பரீட்சைக்குப் பொருத்தமானதா என்பதனை முற்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
  3. மாணவர்கள் அனைவரும் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் தோன்றி, பரீட்சகரிடம் தங்கள் முகத்தினைத் தெளிவாகத் தெரியும் வண்ணம் காண்பிப்பதன் மூலம் தங்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
  4. கிடைத்தள நிலையில் (Land scape) பொருத்தமான பின்னணிச் சூழலில் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற மெய்நிகர் (Zoom) இணைப்பினூடாக இணைந்து கொள்ளுதல் வேண்டும்.
  5. தங்களது செயன்முறையினைப் படமெடுப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொள்வது விரும்பத்தக்கது. 
  6. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆற்றுகைகள், செயன்முறைகளை இடைவிடாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும். 
  7. மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட கால அளவினுள் தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்யவேண்டும். காணொளியினைப் பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.
  8. ஒளிப்பதிவினை மேற்கொள்ளும்போது தங்களது ஆடல் அசைவுகளில் கைகால் செயற்பாடுகள் முழுமையாகப் பரீட்சகர் அவதானிக்கும் வகையில் அமைதல் அவசியமாகும்.
  9. போதிய வெளிச்சமுள்ள நிலையில் பரீட்சகர்களுக்கு  நன்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் ஆற்றுகை செய்யப்பட வேண்டும்.
  10. தொழிநுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக sar_exam_svias@esn.ac.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 065-2222663 / 0777883229 ஆகிய  தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Deputy Registrar

Examination & Student Admission

Swamy Vipulananda Institute of Aesthetic Studies

Eastern University, Sri Lanka