GEE-CELL அனுசரணையில் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8)


“சவாலில் இருந்தே மாற்றங்கள் உருவாகின்றன. நாம் சவாலினை தேர்ந்தெடுப்போம்”என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி எமது நிறுவக வளாகத்தில் நடைபெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வரவேற்புரையை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வானதி பகிரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து பெண்கள் தின அறிமுகவுரையை விரிவுரையாளர் திருமதி கலைமகள் கோகுலராஜ் நிகழ்த்தினார். சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ் சினி ஞானதாஸ் அரங்க செயற்பாடுகளும் பெண்களும் என்ற தலைப்பில் அனுபவப் பகிர்வை ஆற்றியிருந்தார். சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி உமா சிறிசங்கரின் நெறியாள்கையில் கவிதா நிகழ்வும், கலாநிதி உஷாந்தி துரைசிங்கத்தின் நெறியாள்கையில் நடன நாட்டிய அளிக்கையும், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சியாமளாங்கி கருணாகரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி நிர்மலேஸ்வரி பிரசாந் மற்றும் போதனாசிரியர் செல்வி பிருந்தா ராகவன் ஆகியோரின் நெறியாள்கையில் இசை அளிக்கையும் நடைபெற்றது. விரிவுரையாளர் உ.லெ.இஃப்பத்நீதா, போதனாசிரியர் த.வினோஜா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைப்புச் செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கான அனுசரணையை GEE-CELL என்ற அமைப்பு வழங்கியிருந்தது.

International Women’s Day, sponsored by GEE-CELL

International Women’s Day was celebrated in SVIAS on 8th of March 2021, headed by Dr. Florence Bharathy Kennedy, under the following theme: ‘Changes are created from challenge. We will choose challenge’. Inspirational speeches were delivered by Dr.(Ms.). V. Pahirathan, Ms. K. Kalaimagal, and Dr. (Ms.). Gnanadas. Cultural programmes were performed under the direction of the following lecturers: Mr. K. Mohanathasan, Ms. U. Srishanker, Dr. (Ms.).U. Thuraisingam, Dr. (Ms.). K. Siyamalangi, Dr. (Ms.). N. Prashanth , and Ms. R. Brindha. International Women’s Day was coordinated by Ms. U. L. Iffath Neetha and Ms. T. Vinoja.