தைப்பொங்கல் விழா – 2019


தைப்பொங்கல் விழா

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவ் விழாவினை சிறப்பிக்கும் வகையிலும், மருவி வரும் தமிழர்களின் கலைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசை “பொங்கலோ பொங்கல்” எனும் சிறப்பு நிகழ்வை 2019.01.15 அன்று காலை 7.00 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தது. அதில் தமிழர்களின் கலைப்பாரம்பரியத்தினை வெளிக்காட்டி நிற்கும் “பறை இசை” என்னும் ஆற்றுகை இடம்பெற்றிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களது தலைமையின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் எமது நிறுவக மாணவர்களாகிய த.யனுசியா, கு.கோபிதரன், சு.லோபிதரன், ர.தர்சினி ஆகியோரும் மட்டக்களப்பு மூன்றாவது கண் அறிவூ திறன் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர்களும் இணைந்து ஆற்றுகை செய் திருந்தமை குறிப்பிடத் தக்கது.