
கட்புலமும் தொழில் நுட்பமும் துறையைச் சேர்ந்த 2015ஆம் 2016 ஆம் பிரிவைச்சேர்ந்த நான்காம் வருட மாணவர்கள் தமது இறுதியாண்டு நிறைவின் ஒரு அங்கமாக சுயாதீனமான, படைப்புத்திறனை வெளிக்கட்டும் படைப்புக்களை காட்சிப்படுத்தினர். ஓவியம், சிற்பம், ஒழுங்கமைப்புக் கலை, வடிவமைப்பு போன்றவற்றினூடாக உள்ளார்ந்த கருத்தியலை வெளிக்கொண்டு வருவது. இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாகும். 34 மாணவர்களுடைய கலைப் படைப்புகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டன. இக் கண்காட்சியானது கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரை காட்சிப்படுத்தப்பட்டது. கட்புலமும் தொழில் நுட்பமும் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர். பிரகாஸ் இக் கண்காட்சியை ஒழுங்கு படுத்தியிருந்தார்.