சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை – 24 (2022)


கிழக்குப் பல்கலைக்கழகம் வருடாந்தம் நடாத்தும் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையானது இம்முறை, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் 19.07.2022 அன்று நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்.இராமகிருஸ்ண மிஷன் தலைவர், சுவாமி தக்ஷயானந்தஜி மகராஜ் அவர்கள் ஆசியுரையினை வழங்கினார். நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்களும் கலந்துகொண்டனர்.

சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையின் இணையவழி ஆவணப்படுத்தலும் நினைவுப்பேருரை மலர் வெளியீடும் துணைவேந்தர் அவர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டன. நினைவுப் பேருரையானது, ‘தேவாரவியல் ஒரு வரலாற்று விளக்கநிலை நோக்கு’ எனும் தலைப்பில் தகைசால் பேராசியர் அ.சண்முகதாஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இத்தோடு விபுலானந்தர் சிந்தனைகளை வெளிக்கொணரும் முகமாக இசை நிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.