பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021
நுண்கலைமாணி (நாடகமும் அரங்கியலும்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத்திறன்காண் பரீட்சை
நாடகமும் அரங்கியலும் செயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது.
முதற்கட்டம்
இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளிப் பதிவானது 3 – 5 நிமிடத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கு இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்யவும்.
காணொளியினைப் (Video) பதிவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள்
- காணொளியானது ஆரம்பம் முதல் இறுதிவரை இடை நிறுத்தப்படாமலும், திருத்தம்செய்யப்படாமலும் (Do not edit) பதிவுசெய்தல் வேண்டும்.
- காணொளிகள் (Videos) ஏற்கெனவே பதிவிடப்பட்டவைகளாக அல்லாமல் புதிதாகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். அவை சமூக வலைத்தளங்களில் பகிர்தலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
- ஒப்பனை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. உடை நாடகப் பயிற்சிகளுக்குப் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும் (உதாரணம்: Bottom, T-shirt, சுடிதார்)
இரண்டாம் கட்டம்
இப் பகுதியானது பரீட்சார்த்திகள் மெய்நிகர் (Zoom) வழியாக இணைந்து பரீட்சகரினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு செயன்முறை, வாய்மொழி மூலமாகப் பதிலளிப்பதாக அமையும்.
மெய்நிகர் (Zoom) பரீட்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்.
- ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
- பரீட்சார்த்திக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாக மெய்நிகர் செயலிக்குள் உள் நுழைய வேண்டும்.
- பரீட்சை நடைபெறும்போது படப்பிடிப்பாளரினைத் தவிர வேறு எவரும் அவ்விடத்தில் தடங்கலாக இருத்தல் கூடாது என்பதுடன் சூழல் மிக அமைதியான இடமாக இருத்தல் வேண்டும்.
- ஒப்பனை நேர்முகப் பரீட்சையின்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. உடை, நாடகப் பயிற்சிகளுக்குப் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும் (உதாரணம்: Bottom, T-shirt, சுடிதார்).
குறிப்பு : இரண்டு கட்டங்களாகப் பரீட்சிக்கின்றபோது மாணவர்களிடமிருந்து முகபாவம், குரல்வளம், உடல்மொழி, லயம், அசைவும் வெளியும், கற்பனை போன்ற விடயங்கள் புள்ளியிடலின்போது கருத்திற் கொள்ளப்படும்.
மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்
- குறைந்தபட்சம் மாணவர்கள் SMART கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும் கையேட்டுக்கணனி (Tablet), கையடக்க இசைக்கேளி (Ipad) இருப்பின் அவற்றில் யாதேனும் ஒன்றினைப் பயன்படுத்தலாம்.
- Audio, Video இணையம் என்பன தடங்கல் இல்லாமல் செயற்படும் இடத்தினைத் தெரிவுசெய்து, அவ்விடம் பரீட்சைக்குப் பொருத்தமானதா என்பதனை முற்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் தோன்றி, பரீட்சகரிடம் தங்கள் முகத்தினைத் தெளிவாகத் தெரியும் வண்ணம் காண்பிப்பதன் மூலம் தங்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
- கிடைத்தள நிலையில் (Land scape) பொருத்தமான பின்னணிச் சூழலில் தம்மை அடையாளப்படுத்தும் வகையில்தரப்படுகின்ற மெய்நிகர் (Zoom) இணைப்பினூடாக இணைந்து கொள்ளுதல் வேண்டும்.
- தங்களது செயன்முறையினைப் படமெடுப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொள்வது விரும்பத்தக்கது.
- மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆற்றுகைகள், செயன்முறைகளை இடைவிடாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும்.
- மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட கால அளவினுள் தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்யவேண்டும். காணொளியினைப் பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.
- ஒளிப்பதிவினை மேற்கொள்ளும்போது தங்களது ஆடல் அசைவுகளில் கைகால் செயற்பாடுகள் முழுமையாகப்பரீட்சகர் அவதானிக்கும் வகையில் அமைதல் அவசியமாகும்.
- போதிய வெளிச்சமுள்ள நிலையில் பரீட்சகர்களுக்கு நன்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் ஆற்றுகை செய்யப்பட வேண்டும்.
- தொழிநுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக sar_exam_svias@esn.ac.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 065-2222663 / 0777883229 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.