VTA

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்இலங்கை

பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021

நுண்கலைமாணி (கட்புல தொழில்நுட்ப கலைத்துறை) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை

  1. கட்புல தொழில்துட்பத்துறை மாணவர்களுக்கான செயல்முறை ஒளிப்பட மாதிரியை எமது இணையத் தளத்தில் பார்வையிட்டுக் கொள்ளுதல் வேண்டும். VTA: Click Here
  2. இச் செயல் முறைப் பரீட்சையானது 15 நிமிட அளவு நேரத்தைக் கொண்டதாக இருக்கும்.
  3. உங்களுக்குத் தரப்பட்ட காலஅட்டவணையின் பிரகாரம் அரைமணித்தியாலத்துக்கு முன்பாக தரப்பட்ட மெய்நிகர் செலிக்குள் (Zoom) நுழைதல் வேண்டும்.
  4. மாணவர்கள் அனைவரும் ஒழுக்கமான ஆடை அணிந்திருத்தல் வேண்டும்.
  5. பரீட்சை நடைபெறும் போது மேற்பார்வையாளர் உங்களை அவதானித்துக் கொண்டிருப்பார். அதனால் உங்கள் ஒளிப்படத்தை நிறுத்தாமல் பரீட்சை முடியும் வரை இயக்கத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  6. பரீட்சைக்குச் தோன்றும் போது மாணவர்கள் வைத்திருக்க வேண்டியவை.
    i. White paper A3 size
     ii. Pencil 2B, 4B iii. Eraser
     iv. Drawing Board 1.5 feet X 1.5 feet
     v. Drawing Board Clip – 4
  7. பின்வரும் விடயங்கள் தங்கள் செயல்முறையில் கவனத்தில் கொள்ளப்படும்.
    1. சுதந்திர வரைதல் திறன் ((Free hand drawing)
     2. அளவுப் பிரமாணம் (Proportion)
     3. ஒளிநிழல் படுத்துகை (Light and Shading)
     4. உருவத்தொகுப்பு (Composition)

மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்

  1. குறைந்தபட்சம் மாணவர்கள் SMART கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த     வேண்டும். இருப்பினும் கையேட்டுக்கணனி (Tablet), கையடக்க இசைக்கேளி (IPad) இருப்பின் அவற்றில் யாதேனும் ஒன்றினைப் பயன்படுத்தலாம். 
  2. சகல மாணவர்களும் தத்தமது பாடங்களுக்குரிய செயன் முறைவிளக்கக் காணொளியை நிறுவக இணையத்தளத்தில் பார்வையிட வேண்டும்.
  3. Audio, Video இணையம் என்பன தடங்கல் இல்லாமல் செயற்படும்    இடத்தினைத் தெரிவுசெய்து, அவ்விடம் பரீட்சைக்குப் பொருத்தமானதா என்பதனை முற்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
  4. மாணவர்கள் அனைவரும் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் தோன்றி, பரீட்சகரிடம் தங்கள் முகத்தினைத் தெளிவாகத் தெரியும் வண்ணம் காண்பிப்பதன் மூலம் தங்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
  5. கிடைத்தள நிலையில் (Land scape) பொருத்தமான பின்னணிச் சூழலில் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற மெய்நிகர் (Zoom) இணைப்பினூடாக இணைந்து கொள்ளுதல் வேண்டும்.
  6. தங்களது செயன்முறையினைப் படமெடுப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொள்வது விரும்பத்தக்கது.
  7. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆற்றுகைகள், செயன்முறைகளை இடைவிடாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும்.
  8. போதிய வெளிச்சமுள்ள நிலையில் பரீட்சகர்களுக்கு  நன்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் ஆற்றுகை செய்யப்பட வேண்டும்.
  9. மாணவர்கள் பரீட்சை விதிமுறைகளை மீறுவதாக இனம்காணப்பட்டால் அவர்களுடைய பதிவு முழுமையாக இரத்துச் செய்யப்படும்.
  10. தொழிநுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக sar_exam_svias@esn.ac.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 065-2222663 / 0777883229 ஆகிய  தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Deputy Registrar

Examination & Student Admission

Swamy Vipulananda Institute of Aesthetic Studies

Eastern University, Sri Lanka