Drama
பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (நாடகமும் அரங்கியலும்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத்திறன்காண் பரீட்சை நாடகமும் அரங்கியலும் செயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது. முதற்கட்டம் இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளிப் பதிவானது 3 – 5 நிமிடத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் […]